சபரிமலை சன்னிதான போலீஸ் SPக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
சபரிமலையில் களபாபிஷேகத்துக்கு கட்டணம் வசூலித்ததில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து அறிக்கை அளிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களபாபிஷேகத்திற்கு பக்தர் சந்தனம் கொண்டு வந்தால் தேவசம்போர்டு 12 ஆயிரத்து 500 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், கடந்த 1ம் தேதி களபாபிஷேகத்திற்கு பக்தர் சந்தனம் கொடுத்த நிலையில், அவரிடமிருந்து முழு தொகையான 38 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிந்த கேரள உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க சன்னிதானம் போலீஸ் எஸ்.பி-க்கு உத்தரவிட்டது.
Next Story