நாட்டையே அதிரவைத்த கேரள சினிமா துறை விவகாரம்.. இதுவரை..
கேராளாவில், நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், இதுவரை 26 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மலையாள சினிமா துறையில் பாலியல் வன்முறை மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய 2017இல், ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின், நடிகைகள் பலரும் நடிகர், இயக்குநர், தயாரிபாளர்கள் மீது பாலியல் புகார்கள் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான வழக்குகளை கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், சுதா ஆகியோர் உள்ள சிறப்பு அமர்வு விசாரணை செய்து வருகிறது.
ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 26 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
10 வழக்குகளில் முதற்கட்ட விசாரணை நடந்து வருகின்றன, மேலும் 4 வழக்குகளை எஸ்ஐடி விசாரித்து வருகிறது.
Next Story