அடுத்த அபாயம்.. கேரளாவுக்கு வந்த எச்சரிக்கை செய்தி
கேரளாவில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வரும்
நிலையில், இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்,
கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம்,
பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களில்
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில்
சூறாவளி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. கேரளா கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமைக்கு பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு, 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story