மின்னல் வேகத்தில் பரவும் காய்ச்சல்.. ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் அட்டாக்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

x

கேரளாவில் டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல், எச்1என்1, மலேரியா, மஞ்சள கா மாலை உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மாட்டும் 2 லட்சத்து 75 ஆயிரம் லட்சம் பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கேரளாவில் 66 ஆயிரத்து 880 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் 652 பேருக்கு டெங்கு காய்ச்சலும் 77 பேருக்கு எலிக்காய்ச்சலும் 94 பேருக்கு ஹெபடைடிஸ் ஏ மற்றும் 21 பேருக்கு ஹெபடைடிஸ் பி இருப்பது கண்டறியப்பட்டது. இதில் நேற்று மட்டும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 11 ஆயிரத்து 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 159 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில்10 பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்