காய்ச்சல் கன்பார்ம்... இறைச்சி, முட்டை விற்க தடை - அதிரடி அறிவிப்பு
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மேலும் 3 இடங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா 7வது வார்டு, எடத்துவா 10வது வார்டு, தகழி பஞ்சாயத்து வது வார்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோமீட்டர் சுற்றளவு, நோயால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாத்துகள், முட்டைகள், போன்றவற்றை அழிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நோய் பரவல் காரணமாக வாத்து இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கிலோ மீட்டருக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story