கேரளாவை உலுக்கும் பறவைக்காய்ச்சல்.. "மனிதருக்கும் பரவும்.." பறந்த எச்சரிக்கை
கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கால்நடைத் துறையுடன் இணைந்து கண்காணிப்புப் பணிகளை முடுக்கி விடுமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட மற்றும் நகர சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள், இறைச்சி கூடங்கள், சந்தைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்... இந்த நோய் மனிதருக்குப் பரவும் என்பதால் தான் முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஃப்ளூ காய்ச்சல் பாதிப்புகளுடன் நோயாளிகள் இருந்தால் அவர்களுக்குப் பறவைகளுடன் ஏதேனும் தொடர்பு இருந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து நோயாளியின் மாதிரியை எடுத்து அதை புனே ஆய்வகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story