திடீரென ஊருக்குள் வந்த யானை..! அலறி ஓடிய ஊர்மக்கள்.. கலெக்டர் அதிரடி உத்தரவு | Kerala

x

எடவகை பகுதிக்குள் உலா வந்த யானையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானை என்பதால் வேறு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் பந்திப்பூர் காட்டிலிருந்து நீண்ட தூரம் நடந்து வந்த காட்டு யானை வயநாட்டில் ஊருக்குள் புகுந்தது தெரிய வந்தது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதுடன், மானந்தவாடி பகுதியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்று வருகின்றனர். யானை குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறாத நிலையில் மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க வயநாடு ஆட்சியர் ரேணு ராஜ் வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். யானை பிடிபட்டால் அங்கிருந்து கர்நாடகாவிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. யானையை பிடிக்க கர்நாடக வனத்துறையிடமும் உதவி கோரப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்