கேரள ரயில் விபத்து - இறந்த தமிழர்களுக்கு முதல்வர் இரங்கல், நிதியுதவி
கேரள ரயில் விபத்து - இறந்த தமிழர்களுக்கு முதல்வர் இரங்கல், நிதியுதவி
கேரள மாநிலம், ஷோரனூர் அருகே ரயில் மோதி உயிரிழந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்த துயரமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Next Story