மகளுக்கு எதிராகவே சாட்டையை எடுத்த கேரள முதல்வர் பினராயி விசாரணைக்கு உத்தரவு

x

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் 31 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்தாமல் ஏமாற்றியதாக எழுந்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, பெங்களூருவில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். எர்ணாகுளத்தை சேர்ந்த தாது மணல் நிறுவனம், வீணாவின் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு 1 கோடியே 72 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்பட்டது. வீணாவின் நிறுவனத்திடம் இருந்து பெற்ற சேவைக்காக இந்தப் பணத்தை கொடுத்ததாக அந்நிறுவனம் கூறிய நிலையில், எந்த சேவையும் பெறவில்லை என்பது வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வீணா ஜிஎஸ்டி தொகை 31 லட்சம் ரூபாயை செலுத்தினாரா? என்றும், இது குறித்து கேரள நிதியமைச்சர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், வீணாவின் நிறுவனம் ஜி.எஸ்.டி தொகை செலுத்தியதா? என்பது குறித்து விசாரிக்க வரித்துறை ஆணையருக்கு கேரள நிதியமைச்சர் பாலகோபால் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்