அம்மா திட்டியதால் சிறுமி எடுத்த முடிவு - 3ம் கண்ணால் நெருங்கிய போலீஸ்
திருவனந்தபுரத்தில் மாயமான 13 வயது அசாம் சிறுமி கன்னியாகுமரி நோக்கி ரயிலில் புறப்பட்டதாக சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்த நிலையில், கேரள போலீஸார் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு சிறுமி வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் அதிவிரைவு ரயிலில் திருவனந்தபுரத்திலிருந்து ஏறி பயணித்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கேரள போலீசார் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். ரயிலில் சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மாணவி ஒருவர் தன் செல்போனில் படம் எடுத்து போலீசாருக்குப் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து கேரள போலீசார் சிறுமியைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story