மூன்று மொழிகளில் பேசி கேரளாவில் வாக்கு சேகரித்த விஜயதாரணி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார நிகழ்ச்சியில், மலையாளம் உட்பட மூன்று மொழிகளில் பேசி விஜயதாரணி வாக்கு சேகரித்தார். திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரனுக்கு ஆதரவாக பாஜக மகளிர் அணி சார்பில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பேசி அசத்தினார்.
Next Story