கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் - விதிமுறைகள் வெளியீடு

x

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான தேர்வு போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் அதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது....கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், வரும் 19 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்நிலையில், இந்த போட்டிகளுக்கான தேர்வு போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, ஆண்களுக்கான 1,500 மீட்டர், 2000 மீட்டர் தடகள ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 8ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், கடந்த 2005 ஜனவரி 1 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார், பிறப்பு சான்றிதழ், பள்ளி மற்றும் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்து, போட்டியில் பங்கேற்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்