கலங்கி கிடக்கும் இந்திய தலைநகர்.. இன்று வெளியாகும் துயரமான அறிவிப்பு..?

x

டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், முதல்வர் அலுவலகம் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தொண்டர்களிடம் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இந்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவை இன்று கெஜ்ரிவால் சந்திக்க உள்ளதாகவும், அப்போது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்