கெஜ்ரிவால் வழக்கு விவகாரம்! - உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்

x

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவசரமாக கோரும் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்