“மனித வசிப்பிட அடையாளம்“ - கீழடி அகழாய்வில் முக்கிய நகர்வு..
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. ஆய்வில் 111 சென்டிமீட்டர் ஆழத்தில் உடைந்த செம்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தா எழுத்து கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. இப்போது 5 ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்தது போல், மனிதர்கள் குடியிருப்பு அடையாளங்கள் கிடைத்துள்ளன. மக்கள் கொட்டகை போட்டு வசித்திருக்கலாம் எனக் கூறும் வகையில் குழிகள் தென்பட்டுள்ளன. கொட்டகைக்கான கம்புகள் அரிப்பு ஏற்படாமல் இருக்க மணல் கொட்டிருந்த அடையாளமும் தென்பட்டுள்ளது. மேற்கூரைக்கு தேவையான ஓடுகள் மற்றும் பானைகள் இருந்ததும் தென்பட்டுள்ளது. இது குறித்து முழு ஆய்வு முடிந்ததும் தகவல் முழுமையாக கிடைக்கும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story