காஷ்மீர் ஆட்சி.. விலக்கி கொண்ட குடியரசு தலைவர்

x
  • ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுனரை சந்தித்து உமர் அப்துல்லா உரிமை கோரினார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால் குடியரசு தலைவரும்,
  • உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்த
  • பின்பே துணைநிலை ஆளுநர் ஆட்சி அமைக்க
  • அழைப்பு விடுப்பார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார். ஓரிரு நாட்களில் உமர் அப்துல்லாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்க அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்