தமிழகத்திற்கு SHOCK கொடுத்த கர்நாடகா...

x

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 17 ஆயிரத்து 960 கன அடியாக சற்று சரிந்துள்ளது. அந்த வகையில், கே.ஆர்.எஸ். அணையின் நீர்வரத்து 2 ஆயிரத்து 349 கன அடியாகவும், நீர் இருப்பு 29 புள்ளி 43 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் 12 ஆயிரத்து 960 கன அடியாகவும் உள்ளது. அதேபோல, கபினி அணையின் நீர்வரத்து ஆயிரத்து 764 கன அடியாகவும், நீர் இருப்பு 15 புள்ளி 81 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் 5 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது. இதனால் இரு அணைகளின் நீர் வெளியேற்றம் 18 ஆயிரத்து 145 கன அடியில் இருந்து 17 ஆயிரத்து 960 கன அடியாக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்