திடீரென இடிந்து விழுந்த பாலம்... டிரைவரோடு ஆற்றுக்குள் விழுந்த லாரி - வெளியான உயிர்போராட்ட வீடியோ

x

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடாவில் கோவா செல்லும் வழியில் காளி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. விபத்தில் பாலத்தில் சென்ற லாரி ஒன்று சிக்கி ஆற்றுக்குள் விழுந்துள்ளது. உடனடியாக கர்நாடகா போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக பாலம் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் பாலங்களை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்