பெண் வழக்கறிஞரிடம் உள்ளாடை குறித்து பேச்சு..! கண்டித்த சுப்ரீம் கோர்ட்! மன்னிப்பு கேட்ட நீதிபதி

x

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, வழக்கு விசாரணையின் போது, மேற்கு பெங்களூருவில் ஒரு குறிப்பிட்ட பகுதி, இஸ்லாமியர்கள் ஆதிக்கத்தில் பாகிஸ்தானை போல் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அதுபோல் பெண் வழக்கறிஞரிடம் உள்ளாடை போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்து அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, விமர்சனங்களும் எழுந்தன. இவ்விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதிகள் எந்த மாதிரியான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதுள்ளதாக குறிப்பிட்டதோடு, கர்நாடகா உயர்நீதிமன்றம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பார் கவுன்சில் பிரதிநிதிகளை நீதிமன்ற அறைக்கு அழைத்து நீதிபதி ஸ்ரீஷானந்தா வெளிப்படையாக வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்