காவேரியின் அளவை குறைத்தது கர்நாடகா

x

கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் நீர் வெளியேற்றத்தின் அளவானது நேற்று 18 ஆயிரத்து 145 கன அடியாக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 17 ஆயிரத்து 776 கன அடியாக குறைந்துள்ளது... கே.ஆர்.எஸ் அணையில் நீர் இருப்பு 28.51 டி.எம்.சியாகவும், நீர்வரத்து 4 ஆயிரத்து 878 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 12 ஆயிரத்து 776 கன அடியாகவும் உள்ளது. அதேபோல், கபினி அணையில் நீர் இருப்பு 15.45 டி.எம்.சியாகவும், நீர்வரத்து 3 ஆயிரத்து 203 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்