OLA கம்பெனிக்கு எதிராக சம்பவம் செய்த தனி ஒருவள்.. பற்றும் ஒரு விரல் புரட்சி.. இணையத்தில் டிரெண்ட் அடிக்கும் வீடியோ

x

கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் ஓலா பைக்கிற்கு எதிராக நூதனமான முறையில் பிரசாரம் செய்ய தொடங்கியிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.சமீபகாலமாக ஓலா பைக்குகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு பிரச்சினைகள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. சில தினங்களுக்கு முன் கர்நாடகாவின் கலபுறுகி மாவட்டத்தில் ஓலா பைக்கில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்து கொடுக்காத ஆத்திரத்தில் ஓலா பைக் விற்பனை நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் வாங்கிய ஓலா பைக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் சேவை மையத்தை அணுகிய போதும் பிரச்சினைகள் சரியாகவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் யாரும் ஓலா பைக்கை வாங்க வேண்டாம் என பேப்பரில் எழுதி தனது வாகனத்தில் போஸ்டராக ஒட்டிய அவர் அதை புகைப்படமாக எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Dont buy ola என்ற ஆஷ் டாக்கில் பதிவிட்டுள்ள அவர் ஓலாவுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்