சரமாரியாக கேள்வி எழுப்பிய நபர்... சாப்பிட்டு கொண்டே மெத்தனமாக பதிலளித்த மத்திய இணை அமைச்சர்

x

கர்நாடகாவை சே​ர்ந்த மத்திய இணை அமைச்சரிடம், மீனவர் சங்கத்தலைவர் சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா உடுப்பி சிக்கமகளூரு தொகுதி பா.ஜ.க எம்.பி. ஷோபா கரந்தலாஜே, மத்திய வேளாண்துறை இணை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், உடுப்பி மாவட்ட சுற்றுலா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மீனவர் சங்கத்தலைவர் கிஷோர் டி.சுவர்ணா எழுப்பிய கேள்விகளுக்கு சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டே மெத்தனமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிஷோர், 10 ஆண்டுகள் தங்கள் தொகுதியில் உறுப்பினராக இருந்து தேவையானவற்றை எதையும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்