ஆசையாக மட்டன் சமைத்து சாப்பிட்ட குடும்பமே துடிதுடித்து பலியான கொடுமை.. மட்டனும் உயிரை கொல்லும் எமனா?
மட்டன் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று கூறி உடல் நலனுக்காக ஆட்டிறைச்சி வாங்குவோரும் இனி கவனமாக இருக்க வேண்டும் போல...
அட... மட்டனில் என்ன சிக்கல் என்று கேட்கிறீர்களா?...கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் துடிதுடித்து உயிரை விட்டுள்ளனர்...
ஹோட்டலில் போய் வாங்கி சாப்பிட்டால் தானே பிரச்சினை... கறி வாங்கி வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் என நீங்கள் நினைத்தால் அதற்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது...
சிராவாரா தாலுகா...கல்லூரைச் சேர்ந்த பீமன் கடைக்குச் சென்று ஆட்டுக்கறி வாங்கி வந்துள்ளார்...
பின்னர் குடும்பமாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்...
சரி மீதம் கொஞ்சம் கறி இருக்கிறதே அதையும் தீர்த்து விடுவோம் என்று...இரவில் மிச்சமிருந்த கறியையும் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளனர்...
அதன் பிறகு தான் ஆரம்பித்தது வில்லங்கம்.. ஒரே நேரத்தில் பீமன் குடும்பத்தில் ஒவ்வொருவராக வாந்தி, மயக்கம் என இருக்க, அக்கம்பக்கத்தினர் பதறிப் போய் அனைவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆயத்தமாயினர்...
ஆனால் அதுவரை கூட அவர்கள் உயிர் தாக்குப்பிடிக்கவில்லை...
பீமன், அவரது மனைவி ஈரம்மா, மகன் மல்லேஷ், மகள் பார்வதி என நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்...
மற்றொரு மகளான மல்லம்மா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்...
ஒருவேளை வாங்கி வந்த இறைச்சி காலாவதியானதா?...அல்லது உணவில் வேறு ஏதேனும் விஷப் பொருள்கள் கலந்துள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க இறைச்சிக் குழம்பின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன...
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...
மல்லம்மாவுக்கு சுய நினைவு திரும்பினால் மட்டுமே நடந்தது என்ன என்பது உண்மையாகத் தெரிய வரும்...
கொஞ்ச நாள்களுக்கு முன்பு தான் கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் ராஜஸ்தானில் இருந்து ஆட்டிறைச்சி என்று கொண்டு வரப்பட்ட இறைச்சி உண்மையிலேயே நாய்க்கறி என சர்ச்சை எழுந்த நிலையில்... அப்படி எல்லாம் இல்லை.. அது மட்டன் தான் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே மீண்டும் ஆட்டிறைச்சியால் 4 உயிர்கள் பறிபோயுள்ள சம்பவம் பீதியைக் கிளப்பியுள்ளது...