குடிநீர் தட்டுப்பாட்டால் திடீர் உத்தரவு - மீறினால் ரூ.5000 பைன்
தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீச்சல் குளங்களில் குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. பெங்களூரில் உள்ள ஒவ்வொரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பிலும் பெரிய அளவில் நீச்சல் குளங்கள் உள்ளன. அந்த நீச்சல் குளங்களில் குடிநீரை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ள கர்நாடக அரசு, இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஆனால், பெரும்பாலான நீச்சல் குளங்களில் குடிநீரை பயன்படுத்துவதில்லை என்றும், நீச்சல் குளங்களால் தண்ணீர் வீணாவதும் குறைவு என்றும் நீச்சல்குள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story