சட்டவிரோத சொத்து வழக்கு - கர்நாடக துணை முதல்வர் மீது பாய்ந்த வழக்கு

x

இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து டி.கே. சிவகுமார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் வேளையில், கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதன் பின்னர் சிவகுமார் மீதான வழக்கை சிபிஐ இடம் இருந்து திரும்பப் பெறுவது என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அதோடு லோக் ஆயுக்த அமைப்பு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தற்போது வரை டீ கே சிவக்குமாரின் ஏற்று சிபிஐ இடம் இருந்து இந்த வழக்கை திரும்ப பெறுவது இந்த உத்தரவையும் வழங்கவில்லை. இதனிடையே அமைச்சரவை எடுத்த முடிவின்படி துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்