கர்நாடக துணை முதலமைச்சர் மீதான வழக்கில் திருப்பம் - உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பு
கடந்த 2017-ம் ஆண்டு, கா்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 8 கோடி ரூபாய் ரொக்கம் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அவர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்தது.
அவர் மீது சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ வழக்கு தாக்கல் செய்தது. தன் மீதான சட்டவிரோத பணமரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவா் உத்தநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது செவ்வாயன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சிவக்குமார் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள், உத்தரவிட்டனர். அவரது வீட்டில் சிக்கிய பணம், சட்டவிரோத பண பரிமாற்றத்தால் கிடைத்த பணம் என்பதை அமலாக்கத்துறை நிரூபிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.