"அட்சதை வேண்டுமா? உத்தரவாதம் வேண்டுமா?" - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சால் சலசலப்பு

x

கர்நாடக மாநிலம் மாகடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.சி.பாலகிருஷ்ணா தனது தொகுதியில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பேசியபோது, மக்கள் நலனுக்காக காங்கிரஸ் 5 உத்தரவாதங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளதாகவும், இருப்பினும் பலர் கோயில்களை பற்றி பேசி மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை வரவேற்கவில்லை என்பதுபோல் ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால், உத்தரவாதங்களை ரத்து செய்து, அதற்கு பதில் புதிதாக கோயில்களைக் கட்டி அதன் மீது அட்சதை தூவி மக்களின் வாக்குகளை பெற முயற்சிப்போம் என்றும் பாலகிருஷ்ணா தெரிவித்தார். கர்நாடக எம்.எல்.ஏ.வின் இந்தப்பேச்சு பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்