"10 வருசமா பொண்ணு தேடுறேன்"..பெண் தேடி தருமாறு வந்த இளைஞர்..மனுவை பார்த்ததும் கலெக்டர் எடுத்த முடிவு

x

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இந்நிலையில், 37 வயதாகும் சங்கப்பா என்ற விவசாயி, தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்றும், தாங்களே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்குமாறும் மனு அளித்தார். மனுவை பெற்ற ஆட்சியர் அதனைப் படித்து, ஒரு நிமிடம் அதிர்ந்து போனதுடன், அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கப்பா, கடந்த 10 ஆண்டுகளாக, தான் பெண் தேடி வருவதாகவும், ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் தயாராக இல்லை... இதேநிலை தான் மற்ற இளைஞர்களுக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சங்கப்பாவின் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அதனை எந்தத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று சரிபார்த்து அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்