" அரசியலில் இருந்து விலக தயார்" கர்நாடக முதல்வர் சித்தராமையா பரபரப்பு பேட்டி | Siddaramaiah

x

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் அவரது மகன் யதீந்திராவும் பேசிய வீடியோவை மதசார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம், யதீந்திரா சித்தராமையா வரி வசூலிக்கப்படுவதற்கான முழு ஆதாரம் வெளியாகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை விடமாட்டோம் என்ற அவர், இந்த வீடியோவுக்கு சித்தராமையாவின் பதில் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அந்த வீடியோவில் பணம் குறித்தோ, பணி இட மாற்றம் குறித்தோ பேசியுள்ளாரா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். பணி மாற்றம் என்பது வழக்கமான நிகழ்வு என்றும், பணம் பெற்றுக்கொண்டு செய்த‌தாக நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேறத் தயார் என்றும் கூறியுள்ளார். ஆனால், மின்சாரம் திருட்டு வழக்கை திசை திருப்பவே குமாரசாமி முயற்சிப்பதாகவும் சித்தராமையா விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்