மாமூல் கேட்டு மனைவி கண்முன்னே கணவனை வெட்டிய கொலைகார பாவிகள்.. குலைநடுங்கவிடும் வீடியோ

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமூல் கொடுக்க மறுத்த வயதான தம்பதி கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முளகுமூடு ஆர்.சி தெரு பகுதியை சேர்ந்த ஜஸ்டின் - சுசீலா தம்பதி இறைச்சி வியாபாரம் செய்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் உள்பட 7 பேர் சேர்ந்து ஜஸ்டின் கடைக்கு சென்று ஈஸ்டர் செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்த தம்பதியை அக்கும்பல் சரமாரியாக தாக்கியதுடன் ஜஸ்டினை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்... படுகாயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்