கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குநர் தற்கொலை
மாதா மற்றும் யெட்டேலு மஞ்சுநாதா போன்ற சிறந்த கன்னட திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் குருபிரசாத்...
படங்களை இயக்குவது மட்டுமா...பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து முன்னணி நடிகராகவும் திகழ்ந்தவர்...
மேலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கு பெற்றுள்ளார்.
கன்னட திரையுலகில் மதிக்கத்தக்க இயக்குநராக வலம் வந்த குருபிரசாத், சமீபத்தில் தயாரித்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியுள்ளது..
இதனால் பல இடங்களில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்ததாக கூறப்படுகிறது..
52 வயதான குருபிரசாத், தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று மற்றொரு பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தான், பெங்களூர் புறநகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குருபிரசாத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த போலீசார், குருபிரசாத்தின் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது, தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய சடலமாக மீட்கப்பட்டார் குருபிரசாத்...
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
குருபிரசாத் பொருளாதார நெருக்கடியில் இருந்ததால், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பேசப்படும் நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னட திரையுலகில் முக்கிய இயக்குநராக இருந்தவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.