லஞ்சம் வாங்கியே ரூ.50 கோடிக்கு அதிபதியான சாதாரண தாசில்தார்.. கணக்கில்லாமல் சிக்கிய நகை, பணம்

x

ரேணிகுண்டா மண்டல தாசில்தாராக பணியில் இருந்தவர் சிவ பிரசாத்... சமீபத்தில் இவர் கடப்பா மண்டல தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இவருக்கும் இவருடைய குடும்பத்திற்கும் சொந்தமாக திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடுகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது. அவருடைய வீடுகளில் இருந்து ஏராளமான சொத்து பத்திரங்கள், தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், லாக்கர் சாவிகள் ஆகியவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்