#Justin|| என்ன சொல்ல போகிறது தேர்தல் ஆணையம்?.. சற்று நேரத்தில் அலாரம்.. அவசரமாக கூடிய காங்கிரஸ்

x

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த கமிட்டியில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

.இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற மசோதாக்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும், தற்போது நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு, 5 மாநிலம் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் வியூகம், தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்