ரிசல்ட்டுக்கு முன்பே பாஜகவுக்கு 5 MLAக்கள்..? ஜம்மு காஷ்மீரில் யாரும் எதிர்பாரா ட்விஸ்ட் - காங்.,க்கு செக்மேட்..! அரியணை யாருக்கு..?

x

தேர்தல் முடிவு வெளியாகும் முன்பாகவே ஜம்மு காஷ்மீருக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கும் விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீரில் வருகிற 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இப்போது 5 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் நடவடிக்கை விவகாரம் அம்மாநில அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. மாநிலமாக தேர்தலை சந்தித்த காஷ்மீரில் நியமன எம்.எல்.ஏ.க்கள் கிடையாது.

இப்போது சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக கொண்ட ஜம்மு காஷ்மீரில் 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தில் 2023-ல் கொண்டுவரப்பட்ட திருத்தம், பேரவையில் 5 எம்.எல்.ஏ.க்களை துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யலாம் என சொல்கிறது.

அதாவது காஷ்மீரி பண்டிட்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வந்த அகதிகளுக்கு பிரநிதிநிதித்துவம் வழங்க வழி செய்கிறது. இந்த நகர்வு ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை அமைப்பதிலும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அதாவது காஷ்மீரி பண்டிட்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வந்த அகதிகளுக்கு பிரநிதிநிதித்துவம் வழங்க வழி செய்கிறது. இந்த நகர்வு ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை அமைப்பதிலும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெற்ற 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை வென்ற கட்சி பெரும்பான்மை பெறும். ஆனால் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 95 ஆக உயரும் போது பெரும்பான்மை பலம் 48 ஆக உயரும்.

அத்தகைய சூழலில் இப்போது ஆட்சியை நடத்த காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் பாஜகவுக்கு 43 இடங்களில் வென்றலே போதும் என்ற சூழல் உருவாகும்.

தேர்தல் முடிவுக்கு முன்பாக 5 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிர்க்கின்றன. புதிய அரசாங்கமே 5 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான பரிந்துரையை வழங்க வேண்டும் என சொல்லும் காங்கிரஸ், ஆட்சி அமைக்க வழியில்லை என்றாலும் எப்படியாவது எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை காட்ட முயற்சிப்பது பாஜகவின் விரக்தியை காட்டுகிறது என விமர்சிக்கிறது.

காஷ்மீரில் 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் உரிமை மற்றும் உறுப்பினர்கள் அரசாங்க அமைப்பில் பங்கு பெறுவார்களா என்பது குறித்து சட்டப்பூர்வ மவுனமே தொடர்கிறது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் சட்டப்பேரவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்கலாம். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் உள்ளது.

நியமன எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுரிமை, 2021 பிப்ரவரியில் புதுச்சேரியில் காங்கிரசின் தலைவிதியையே மாற்றியது. பாஜக நியமன எம்.எல்.ஏ.க்களால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

இதில் முக்கியமாக பார்க்கப்பட்டது 2018-ல் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு... ஆம்... தீர்ப்பில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்வதற்கு மாநில அரசிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மற்றொரு முக்கிய தீர்ப்பாக, நியமனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே வேறுபாடு இல்லை, நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா தீர்மானம், பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களிலும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என தெரிவித்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்