"ஜார்க்கண்ட்டில் அடக்குமுறை".. பாஜகவை வறுத்தெடுத்த அமைச்சர் உதயநிதி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து கொடூரமான வழிகளையும், முயற்சிகளையும் அச்சம் கொண்ட பாசிஸ்டுகள் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். மேலும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நாட்டு மக்கள் உற்று கவனித்து வருவதாகவும், 2024 தேர்தலில் தீர்க்கமான முடிவை அவர்கள் எடுப்பார்கள் என்றும் விமர்சித்தார்.
Next Story