நாடே உற்றுநோக்கும் காஷ்மீர் தேர்தல் - முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட ராகுல்

x

ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர், ஸ்ரீநகரில் பருக் அப்துல்லா, ஓமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சி.பி.எம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பேந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணி 85 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எஞ்சியுள்ள 5 தொகுதிகளில் நட்பு ரீதியான போட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்