காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... இந்த முறை குட் நியூஸ்

x

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... இந்த முறை குட் நியூஸ்

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் அக்னூரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் அக்னூரில் இந்திய ராணுவ வாகனம் மீது இன்று காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உஷாரான ராணுவ வீரர்கள் தாக்குதலை முறியடித்தனர். இதில் ராணுவ வீரர்கள் யாருக்கும் காயம், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய போது, கான்வாயில் இருந்த ராணுவ ஆம்புலன்ஸின் கண்ணாடி உடைந்தது. கடந்த வாரம், பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்