பரபரக்கும் தேசத்தின் தலை... உரிமை கோரினார் உமர் அப்துல்லா... | Omar Abdullah

x

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா உரிமை கோரினார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும், மற்றொரு கூட்டணி கட்சியான சிபிஎம் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய மாநாட்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரை சந்தித்த ஒமர் அப்துல்லா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பதவியேற்பு விழா தேதியை விரைவில் முடிவு செய்யும்படி துணைநிலை ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

அனைத்து நடைமுறைகளும் செவ்வாய்க்கிழமைக்குள் நிறைவு பெற்று விட்டால் வரும் புதன்கிழமை பதவி ஏற்பு விழா இருக்கும் என ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்