"ஜம்மு காஷ்மீரில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி?" - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் மக்களை அச்சுறுத்தும் வகையில் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முக்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து மழை பெய்தால், ஒரு மாதத்திற்கு தேர்தல் நடத்தப்படாதா என கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் ஆதரவை பார்த்து அவர்கள் கூறும் சாக்குகள் தான் இவை என குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் விவகாரத்தில், பெரும் சிரமத்திற்குப் பிறகே மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு, தெரிவித்துக்கொள்வதாகவும் , ஒரு நபருக்காகவோ, ஒரு கட்சிக்காகவோ நம்பிக்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story