சிறைக்குள் சாதி பாகுபாடு - உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | Supreme Court | Jail | Thanthi TV
சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையெடு அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறைச்சாலை கையேடுகள் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த சுகன்யா சாந்தா தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது, தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் சிறையில் கைதிகளுக்கு பணிகள் ஒதுக்குவதில் சாதிய பாகுபாடை ஊக்குவிப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வழக்கில் ஜூலை 11 ஆம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம், தற்போது சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையெடுகள் அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்றது. அதை மாற்ற வேண்டும், சிறைச்சாலை பதிவேடுகளில் சாதியை குறிப்பிடும் நடைமுறைக்கு தடை விதிக்கிறோம் என்ற நீதிமன்றம், இதுகுறித்த வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டது. 3 மாதங்களுக்கு பிறகு விசாரணை தொடங்கும், அதற்குள் இன்றை தீர்ப்பை நடைமுறைப்படுத்திய அறிக்கையை மாநில அரசுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.