"உங்களை நேரில் சந்திக்க வேண்டும்..."..பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெகன்

x

ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திராவில் தெலுங்குதேசம் கூட்டணி ஆட்சி பதவியேற்ற 45 நாட்களில், வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆந்திராவில் தற்போதைய சூழல் குறித்து நேரில் சந்தித்து விவரிக்க நேரம் ஒதுக்குமாறும், பிரதமரை ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்