`விரைவில் வெளியே வரும் ஜாபர் சாதிக்` - வழக்கறிஞர் பரபரப்பு தகவல்
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கை மிரட்டி என்சிபி அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றிருக்கலாம் என அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்...
2 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேரை என்.சி.பி அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், சமீபத்தில் 5 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் பிரபாகரன், போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜாபர்சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றும், விரைவில் அவர்கள் பெயிலில் வெளியே வந்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார்....