இஸ்ரோவில் அடுத்த பிளான்.. மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் ககன்யான் - அடுத்த மாதம்..

x

ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை நடைபெறலாம் என, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ ஏவியுள்ளது. இதனையடுத்து இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளது. இந்தநிலையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை அடுத்த மாதம் நடைபெறலாம் என கூறியுள்ளார். முதல் சோதனையில், ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்