உலக நாடுகளை மிரட்டும் இஸ்ரோவின் அடுத்த அதிரடி திட்டம்... - "விரைவில் குட் நியூஸ்.."
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக, இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த ராமாபுரம் தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் உரையாற்றிய இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில், அனைத்து ஊழியர்களும் சமம் என்ற தனித்துவமான அடிப்படையில் செயல்படுவதே இஸ்ரோவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க முக்கிய காரணம் என குறிப்பிட்டார். இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது இஸ்ரோவின் தாரக மந்திரம் என்றும் கூறினார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், மனிதர்களை அனுப்புவதால் அதற்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் செந்தில் தெரிவித்தார். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகக்குறைந்த செலவில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதே இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும், நாசாவில் தொழில்நுட்ப வல்லுனருக்கு ஆகும் செலவில், இந்தியாவில் 4 தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த முடியும் எனவும் தெரிவித்தார்.