இஸ்ரோவின் மறக்க முடியா சம்பவம்.. வல்லரசுகள் தூக்கம் தொலைத்த நாள்.. விண்வெளி வல்லரசான இந்தியா

x

கடந்தாண்டு இதே நாளில் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. விண்ணில் சாதனை படைத்த இந்த நாளை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 23ஆம் தேதியை மத்திய அரசு தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது. முதல் விண்வெளி இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் முதல் தேசிய விண்வெளி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். விண்வெளித் துறையில் நமது தேசத்தின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் நினைவு கூர்வதாகவும், நமது விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் நாள் இது என்றும் தெரிவித்துள்ளார். எங்கள் அரசு விண்வெளித் துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை எடுத்துள்ளது என்றும், வரும் காலங்களிலும் நாங்கள் இன்னும் பலவற்றைச் செய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்