பூமியில் பேரழிவு? வளி மண்டலம் மூடும்... ஒரு கண்டமே சிதறும் - உண்மையை உடைத்து நடுங்கும் இஸ்ரோ
பூமியில் பேரழிவு? வளி மண்டலம் மூடும்... ஒரு கண்டமே சிதறும் - உண்மையை உடைத்து நடுங்கும் இஸ்ரோ
பூமியை நெருங்கி வரும் சிறுகோளால் பேரழிவு நிகழ வாய்ப்புள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
இருள் மற்றும் பாதாள உலகின் எகிப்திய கடவுளான Apophis பெயர் வைக்கப்பட்டதில் இருந்தே தெரிய வேண்டும் இந்த சிறுகோள் எத்தனை பேராபத்து மிக்கது என்று...
முதன்முதலாக 2004ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Apophis சிறுகோள் அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கும் நிலையில், 2029...ஏப்ரல் 13ல் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது...
அதன் பின்னர் 2036லும் பூமியை சந்திக்கப்போகிறது...
இந்தியாவின் புவிசார் செயற்கைக்கோள்கள் Apophis அருகில் வரக்கூடிய தூரத்தை விட அதிக தூரத்தில் இருப்பதால் எவ்வளவு நெருக்கமாக Apophis பூமியை நெருங்கும் என்பதை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது...
பூமியிலிருந்து 32,000 கிலோமீட்டர் உயரத்தில், இந்த அளவுள்ள வேறு எந்த சிறுகோளும் பூமிக்கு அருகில் வந்ததில்லை...
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம்...மற்றும் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களை விடவெல்லாம் இந்த சிறுகோள் பெரிது...
340 முதல் 450 மீட்டர் விட்டம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது...
140 மீட்டர் விட்டம் கொண்ட எந்த ஒரு விண்வெளி பொருளும் பூமிக்கு அருகில் சென்றால் அது ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது...
300மீட்டருக்கும் அதிகம் இருந்தால் ஒரு கண்ட அளவில் பேரழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாம்...
ஒருவேளை சிறுகோள் பூமியுடன் மோதினால் அது பேரழிவை உண்டாக்கும்... மோதும்போது உண்டாகும் தூசி வளிமண்டலத்தை மூடிவிடும்...உலகளாவிய சீர்குலைவை உண்டாக்கும் என எச்சரிக்கிறது இஸ்ரோ...
Apophis சிறுகோளை உன்னிப்பாக கவனித்து வரும் இஸ்ரோ...இதை எதிர்கொள்ள உலக நாடுகளுடன் ஒத்துழைக்கத் தயார் என தெரிவித்துள்ளது...