உலகமே பார்க்க போர் களத்தில் நின்று.. இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இஸ்ரேல் தரப்பில், ஆயிரத்து 139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 250-க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிடித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் மூண்டது. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனிடையே, பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டது. எஞ்சியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், காசாவின் தெற்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றிலிருந்து, 52 வயதான கைத் பர்ஹான் அல்காடி என்பவரை அதிரடி நடவடிக்கை மூலம் இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. தற்போது, 10 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ள அல்காடி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.