இஸ்ரேல் காட்டிய கோர முகம் -கொத்து கொத்தாக கண்டெய்னரில் வரும் சடலங்கள் -நெஞ்சை உலுக்கும் மரண ஓலம்

x

காசாவில் போருக்கு மத்தியில் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருக்கும் நுழைவு பாதை வழியாக கண்டெய்னர் லாரியில் குவியல், குவியலாக சடலங்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழந்தவர்கள் யார்? அவர்களுடைய பெயர் என்ன? அவர்களது வயதுதான் என்ன...? எந்த இடத்தில் அவர்கள் உயிரிழந்தார்கள் என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று கேள்விகளை எழுப்பி பாலஸ்தீனிய அதிகாரிகள் சடலங்களை புதைக்க மறுத்திருக்கிறார்கள். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், போரின் போது இறந்தவர்கள் கண்ணியத்துடன் கையாளப்பட வேண்டும் மற்றும் சரியான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். இப்போது சடலங்களோடு கண்டெய்னர் லாரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்பது குறித்து இஸ்ரேலிடம் சரியான பதில் இல்லை எனக் கூறும் பாலஸ்தீன அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள் இதனை கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக்கும் வேளையில் பெருமளவு சடலங்களை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பியிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்