உங்கள் போன் வித்தியாச ஒலியுடன் அலறுகிறதா? இந்தியர்கள் அனைவருக்கும் இது நடக்கும்.. என்ன காரணம்?

x

இயற்கை பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டத்தை நடத்தியது.

செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி இது. சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை தொடர்பான பொது பாதுகாப்பு, வெளியேற்ற அறிவிப்பு மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கை பெறப்படும். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எம்எம்எஸ் ஆக இந்த எச்சரிக்கை விடப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்