தீபாவளி தமிழர் பண்டிகையா? `புராண கதைகள்..? நிஜ வரலாறு..?' அசர வைக்கும் பல உண்மைகள்..!

x
  • தீபாவளி என்றால் தீபங்களின் ஒளி வரிசை என்று அர்த்தம்.
  • வட இந்தியாவில் உருவான தீபாவளி பண்டிகை, பின்னாட்களில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு தென் இந்திய மாநிலங்களுக்கு பரவியது.
  • சங்க இலக்கியங்களில் தீபாவளி பண்டிகை பற்றிய
  • குறிப்புகள் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, தமிழகத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது.
  • வட இந்திய தீபாவளி பண்டிகை ராமாயணத்துடன் தொடர்புடையது. ராவணனை கொன்று, சீதையை மீட்ட ராமன், பதினான்கு வருட வன வாசத்திற்கு பிறகு, லட்சுமணன், சீதை மற்றும் அனுமாருடன்
  • அயோத்தியாவிற்கு திரும்பிய தினம், வட இந்தியாவில் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
  • ராமர் அயோத்தியா திரும்பியதை கொண்டாடும்
  • வகையில், அனைத்து வீடுகளிலும் பல்வேறு வகையான அகல் விளக்குகள் ஒளியேற்றப்பட்டதாக ராமாயணம் கூறுகிறது.
  • இன்றும் வட இந்திய தீபாவளி பண்டிகையின் போது, வீடுகளில் ஏராளமான அகல் விளக்குகள் ஏற்றப்படும் வழக்கம் தொடர்கிறது. தமிழகத்தில் கார்த்திகை தீபம் அன்று அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
  • தமிழகத்தில், நரகாசுரன் என்ற அசுரனை, கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா கொன்றழித்த தினம், தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத அம்மாவாசைக்கு முந்தைய நாளான நரகா சதுர்த்தியன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.
  • ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில், தீபாவளி அன்று வீடுகளில் லக்ஷ்மி பூஜை செய்வது வழக்கம்.
  • கர்நாடகாவில் பாலி என்ற அசுர மன்னனை வாமன அவதாரத்தில் விஷ்ணு கொன்றதை தீபாவளியாக கொண்டாடும் நடைமுறை உள்ளது. தீபாவளி அன்று விஷ்ணு மற்றும் லஷ்மியை வழிபடுகின்றனர்.
  • கேரளாவில் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கிடையாது. தீபாவளி அன்று வட இந்தியாவைப் போல,
  • அகல் விளக்குகளை ஏற்றும் வழக்கம் மட்டும் உள்ளது.
  • அதே சமயத்தில் இந்தியா முழுவதும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்